×

விஜயகாந்த் மகனுக்கு நடிகர் விஜய் செய்யப்போகும் அந்த உதவி! - என்ன தெரியுமா?

 

நடிகர் விஜயகாந்த் இல்லத்திற்கு சென்ற நடிகர் விஜய்,  பிரேமலதா விஜயகாந்தை நேரில் சந்தித்தபோது விஜய் கூறிய விஷயம் ஒன்று குறித்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.நடிகர் விஜய் இன்று தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். ஆனால் தமிழ் சினிமாவில் தனது ஆரம்ப காலகட்டத்தில் தனக்கான இடத்தை பிடிக்க மிகவும் போராடியவர் விஜய். இயக்குனரின் மகனாக இருந்தும் தொடர் பிளாப் படங்களால் சறுக்கல்களை சந்தித்து வந்தார். அந்த காலகட்டத்தில் டாப் நடிகராக இருந்தவர் நடிகர் விஜயகாந்த், இவருக்கான ரசிகர்கள் பட்டாளம் எக்கச்சக்கமாக இருந்தது. எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் கிட்டத்தட்ட 19 படங்களில் நடித்துள்ளார் விஜயகாந்த்.


எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் விஜய் நடித்த ‘செந்தூரபாண்டி’ படத்தின் மூலம் விஜய்யின் கேரியரை உயர்த்த அப்போது டாப்பில் இருந்த விஜயகாந்த் அந்த படத்தில் விஜய்க்கு அண்ணனாக நடிக்க முன்வந்தார். அந்த படத்தில் விஜய்க்கு அண்ணனாக விஜயகாந்த் நடிக்க படம் ஹிட் ஆனது, அதன் பின் விஜய்க்கு நல்ல பட வாய்ப்புகள் கிடைக்க அதை சரியாக பயன்படுத்திக்கொண்ட விஜய் இன்று இந்திய சினிமா போற்றும் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

தான் இன்று சினிமாவில் வெற்றிகரமாக இருப்பதற்கு முக்கிய காரணம் விஜயகாந்த் என்று  நேர்காணல்களில் நடிகர் விஜயே கூறியிருக்கிறார். மேலும் விஜயகாந்த் மீது மிகுந்த மரியாதை கொண்டவர் நடிகர் விஜய். இப்படி இருக்க, நடிகர் விஜயகாந்த் மறைவிற்கு பிறகு அவரது மகனுக்கு விஜய் சினிமாவில் உதவ முன்வர வேண்டும் என்று பலரும் தெரிவித்து வந்தனர்.


இந்த நிலையில், நடிகர் விஜய் தற்போது நடித்து முடித்துள்ள “GOAT’’ படத்தில் AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நடிகர் விஜயகாந்தை ப்ரீ கிளைமாக்ஸ் காட்சியில் நடிக்க வைத்துள்ளனர். மேலும் இரண்டு நாட்களுக்கு முன் நடிகர் விஜய், இயக்குனர் வெங்கட் பிரபு, அர்ச்சனா கல்பாத்தி ஆகிய மூவரும் சேர்ந்து சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் இல்லத்திற்கு சென்று பிரேமலதா விஜயகாந்தை நேரில் சந்தித்தனர், அதன் பின் விஜயகாந்த் உருவ படத்திற்கு விஜய் அஞ்சலி செலுத்தினர்.


இந்த சந்திப்பின்போது நடந்த முக்கிய சம்பவம் குறித்த தகவல் ஒன்று தற்போது மிகவும் வைரலாகி வருகிறது. அதாவது சினிமாவில் விஜய் நடிக்கப்போகும் கடைசி படமான ‘தளபதி 69’ படத்தில் விஜயகாந்த் மகன் சண்முகப்பாண்டியனுக்கு முக்கியமான ரோலை கொடுப்பதாக விஜய் உறுதியளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.