வித்தியாசமான உருவாகியுள்ள விக்ரம் பிரபுவின் ‘டாணாக்காரன்‘.. புதிய அப்டேட்
நடிகர் விக்ரம் பிரபு நடிக்கும் ‘டாணாக்காரன்’ படத்தின் டீசர் வெளியிடும் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது.
‘புலிக்குத்தி பாண்டியன்’ படத்தின் வெற்றிக்கு பிறகு விக்ரம் பிரபு ‘பாயும் ஒளி நீ எனக்கு’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். அறிமுக இயக்குநர் கார்த்திக் சௌத்ரி இயக்கியுள்ள இந்த படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. இந்த படத்தை முடித்து தற்போது மாணிக்கவேல் இயக்கும் ‘பகையே காத்திரு’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்னர் தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதேபோன்று மணிரத்னம் இயக்கும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தை கைவசம் வைத்துள்ளார்.
இதற்கிடையே வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக இருந்த தமிழ் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்து வெளிவர காத்திருக்கும் திரைப்படம் டாணாக்காரன். வித்தியாசமான பெயரோடு உருவாகியுள்ள இப்படத்தை எஸ்ஆர் பிரபு தயாரித்துள்ளார். இந்த படத்தில் விக்ரம் பிரபுக்கு ஜோடியாக அஞ்சலி நாயர் நடித்துள்ளார். மேலும் லால், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
1997-ல் நடந்த ஒரு உண்மை சம்பவத்தைக் கருவாகக் கொண்டு இந்த படத்தின் கதை அமைந்துள்ளது. ஜிப்ராம் இசையமைத்துள்ள இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த படத்தின் டீசர் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி வரும் ஜூலை 16ம் தேதி 5 மணிக்கு ‘டாணாக்காரன்’ படத்தின் டீசரை அதிகாரப்பூர்வ படக்குழு வெளியிடவுள்ளது. வித்தியாசமாக உருவாகியுள்ள இப்படத்தின் டீசரை காண ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.