புதிய சொகுசு காருக்கு நடிகர் யோகிபாபு பூஜை
Updated: Jul 24, 2025, 21:31 IST
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயிலில் இரவு பிரபல நகைச்சுவை நடிகர் யோகி பாபு சாமி தரிசனம் செய்து அவர் வாங்கியுள்ள விலை உயர்ந்த சொகுசு காருக்கு முருகன் கோயில் சன்னதியில் பூஜைகள் செய்தார்.
திருத்தணி முருகப்பெருமானின் பக்தரான பிரபல நகைச்சுவை நடிகர் யோகி பாபு இரவு முருகன் கோவிலில் பங்கேற்று சாமி தரிசனம் செய்தார். அவருக்கு திருக்கோயில் நிர்வாகம் சார்பில் மலர் மாலை அணிவித்து விபூதி பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து அவர் வாங்கி உள்ள புதிய சொகுசு காருக்கு முருகன் கோயில் சன்னதியில் பூஜைகள் செய்யப்பட்டது. முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்ய வந்திருந்த நடிகர் யோகி பாபு உடன் பக்தர்கள் ஆர்வத்துடன் செல்பி எடுத்துக் கொண்டு மகிழ்ந்தனர்.