×

கிளாமர் காட்டி மயக்கும் திவ்யபாரதி... தீயாய் பரவும் புகைப்படங்கள் !

 

 நடிகை திவ்யபாரதி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கவனம் பெற்றுள்ளது.‌

மாடல் அழகியான நடிகை திவ்யபாரதி, தற்போது சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருக்கிறார். தெலுங்கில் ‘பாலி’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதன்பின்னர் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியான ‘பேச்சுலர்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் வந்திருங்கினார். தனது முதல் படத்திலேயே ஒட்டுமோத்த ரசிகர்களையும் கவர்ந்திழுத்துவிட்டார்.

இதையடுத்து கதிர் நடிப்பில் உருவாகும் புதிய படத்தில் நடித்து வருகிறார். சிவ் மோகா இயக்கத்தில் உருவாகும் இந்த படம் மலையாளத்தில் சூப்பர் ஹிட்டடித்த ‘இஷ்க்‘ படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக உருவாகி வருகிறது. தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் நடித்து வரும் திவ்யாபாரதிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். 

சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் திவ்யபாரதி, தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களை கிறங்கடித்து வருகிறது. அந்த வகையில் ஹாயாக ரெஸ்ட்டெடுக்கும் புகைப்படங்களை தற்போது வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் காட்டுத்தீ போன்று இணையத்தை ஆக்கிரமிக்க தொடங்கியுள்ளது.