அரபிக்குத்துக்கு செம குத்துப்போடும் சமந்தா... வைரல் வீடியோ !
அரபிக்குத்து பாடலுக்கு சூப்பராக டான்ஸ் ஆடும் சமந்தாவின் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'பீஸ்ட்' படத்திற்கு ரசிகர்களிடையே உச்சக்கட்ட எதிர்பார்ப்பு நிலவுகிறது. தங்க கடத்தல் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தை நெல்சன் இயக்கியுள்ளார். தற்போது தயாரிப்பு பணிகள் நடைபெற்று வரும் இப்படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளது. இந்த படத்திற்கு அனிரூத் இசையமைத்து வருகிறார். அவர் இசையில் உருவான 'பீஸ்ட்' படத்தின் முதல் பாடலான அரபிக்குத்து பாடல் சமீபத்தில் வெளியானது.
இந்த பாடல் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. யூடியூப்பில் வெளியான இந்த பாடல் பல மில்லியன் பார்வையாளர்களை கடந்து சென்றுக் கொண்டிருக்கிறது. பிரபலங்கள் பலர் இந்த பாடலுக்கு நடனமாடி வீடியோவை பதிவேற்றம் செய்து வருகின்றனர். இதுவும் பல லட்சம் லைக்குகளை குவித்து வருகிறது.
இந்நிலையில் அபிக்குத்து பாடலுக்கு நடிகை சமந்தா நடனமாடி வீடியோவை ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். பாடலில் பூஜா ஹெக்டேவின் நடனத்தை மிஞ்சும் அளவிற்கு சமந்தாவின் நடனம் இருக்கிறது. சமந்தா செம குத்துப் போட்டுள்ள இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக வருகிறது. தென்னிந்தியாவின் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, சமீபத்தில் புஷ்பா படத்தில் ஆடிய 'ஊ சொல்றிய' பாடல் பெரிய அளவில் ஹிட்டடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.