×

ஸ்டைலிஷ் லுக்கில் அதிதி ராவ்... இணையத்தை கலக்கும் புகைப்படங்கள் !

 

நடிகை அதிதி ராவின் லேட்டஸ்ட் ஸ்டைலிஷ் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. 

இந்தியாவின் சினிமாவில் ரசிகர்களை மிகுவும் கவர்ந்த நடிகையாக வலம் வருபவர் அதிதி ராவ் ஹைதரி. தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார். தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘காற்று வெளியிடை’ படத்தின் மூலம் அறிமுகமானார். இதையடுத்து மீண்டும் இரண்டாவது முறையாக மணிரதனனின் ‘செக்கக் சிவந்த வானம்’ படத்தில் சிறிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்தார்.

அதன்பிறகு தமிழில் போதிய வாய்ப்பு இல்லாததால் தெலுங்கில் பிசியாக பிசியாக நடித்து வருகிறார். பின்னர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான ‘சைக்கோ’ படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக அதிதி ராவ் நடித்திருந்தார். அதேபோன்று விஜய் சேதுபதியுடன் ‘துக்ளக் தர்பார்’ படத்தில் நடித்துள்ளார். 

இந்நிலையில் தனது அழகான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெறும். தற்போது ஸ்டைலிஷ் லுக்கில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகிறது.