‘மஞ்சள் வெயில் அழகே’.. அதிதி ஷங்கரின் அசத்தல் புகைப்படங்கள் 

 
aditi shankar

 நடிகை அதிதி ஷங்கரின் லேட்டட்ஸ் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. 

aditi shankar

ரசிகர்களை எளிதில் கவர்ந்துவிட்டார் நடிகை அதிதி ஷங்கர். பிரபல இயக்குனர் ஷங்கரின் மகளான இவர், 'விருமன்' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார். முத்தையா மற்றும் கார்த்தி கூட்டணியில் வெளியான இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதில் தேன்மொழி என்ற கிராமத்து பெண் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 

சினிமா வாரிசாக திரைத்துறையில் அறிமுகமானாலும், தனது திறமையால் அடுத்தடுத்த திரைப்படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார். அந்த வகையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் 'மாவீரன்' படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் பிசியாக நடித்து வருகிறார். 

இந்நிலையில் அதிதி ஷங்கரின் லேட்டட்ஸ் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. மஞ்சள் நிற தாவணியில் அசத்தல் லுக்கில் இருக்கும் இந்த புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.