×

ஓடிடியில் வரவேற்பை பெறும் ‘ஃபர்ஹானா’... விட்டதை பிடித்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் !

 

 ஐஸ்வர்யா ராஜேஷின் ‘ஃபர்ஹானா’ திரைப்படம் ஓடிடியில் வரவேற்பை பெற்று வருகிறது. 

பெண்களை முன்னிறுத்தும் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். அந்த வகையில் அவர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஃபர்ஹானா’.  இந்த படத்தை இயக்குனர் வெங்கடேசன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷுடன் இணைந்து ஜித்தன் ரமேஷ், கிட்டி, அனுமோல், ஐஸ்வர்யா தத்தா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

இஸ்லாமியா பெண்கள் படும் இன்னல்கள் குறித்தும், அவர்களது உரிமைகள் குறித்தும் பேசும் படமாக இப்படம்  உருவாகியுள்ளது. கடந்த மே மாதம் இப்படம் திரையரங்கில் வெளியானது. ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற இந்த படம் சில முஸ்லீம் அமைப்புகளின் எதிர்பார்ப்பால் பிரச்சனையும் சந்தித்தது. 

முஸ்லீம் அமைப்புகளின் போராட்டத்திற்கு பிறகு திரையரங்குகளில் இந்த படத்திற்கு வரவேற்பை இல்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் சோனி லைவ் ஓடிடித்தளத்தில் இந்த படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இது படக்குழுவினரை மகிழ்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.