×

ஜாலி ட்ரிப் சென்ற ஐஸ்வர்ய லெஷ்மி... வைரல் புகைப்படங்கள் !

 

 நடிகை ஐஸ்வர்ய லெஷ்மியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தை கவர்ந்து வருகிறது. 

மலையாள திரையுலகின் மூலம் நடிகையாக அறிமுகமான ஐஸ்வர்ய லட்சுமி, மாய நதி, வரதன்,பிரதர்ஸ் டே உள்ளிட்ட வெற்றிப் படங்களில் நடித்து பிரபலமானார். தமிழில் விஷாலின் ‘ஆக்சன்’ படத்தின் மூலம் அறிமுகமானார். சுந்தர் சி இயக்கிய இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்திருந்தார். 

இந்த படத்திற்கு பிறகு கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷின் ‘ஜகமே தந்திரம்’ நடித்தார். இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் பூங்குழலி கேரக்டரில் நடித்து வரவேற்பை பெற்றார். சமீபத்தில் நடிகர் விஷ்ணு விஷாலுடன் அவர் நடித்த ‘கட்டா குஸ்தி’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. 

தற்போது தமிழில் அடுத்தடுத்த படவாய்ப்புகள் குவிந்து வருகிறது. இந்நிலையில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை ஐஸ்வர்ய லட்சுமி வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.