×

தங்கம் விலையை பார்த்தாலே பயமாக இருக்கிறது - நடிகை ஆண்ட்ரியா..!

 
கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் வெள்ளி நகை விற்பனை மையகத்தின் துவக்க விழா நடைபெற்றது. பிரபல நடிகையும், பாடகியுமான ஆண்ட்ரியா நகை கடையை திறந்து வைத்து அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த நகைகளை பார்வையிட்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பேசிய அவர், "எனக்கு மிகவும் பிடித்த ஊர் கோயம்புத்தூர். ஆண்டுக்கு பத்து முறை கோவைக்கு வந்து செல்கிறேன். கோயம்புத்தூர் வந்தாலே எனக்கு மிகுந்த சந்தோஷம். தங்க நகைகளை பார்த்தாலே எல்லோருக்கும் ஒரு வீக்னஸ் இருக்கு.. தற்போது தங்கம் விலையைப் பார்த்தாலே பயமாக இருக்கிறது" என்றார்.

<a style="border: 0px; overflow: hidden" href=https://youtube.com/embed/bouEWuezaPs?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/bouEWuezaPs/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden;" width="640">