அசத்தல் அழகி அஞ்சு குரியனின் ஓணம் ஸ்பெஷல் போட்டோஷூட்!
மலையாள நடிகை அஞ்சு குரியனின் ஸ்பெஷல் போட்டோஷூட் இணையத்தைக் கலக்கி வருகிறது.
மலையாள நடிகை அஞ்சு குரியன் தற்போது அங்கு முன்னணி நடிகையாக வளர்ந்து வருகிறார். அவர் தமிழில் சென்னை டு சிங்கப்பூர், ஜூலை காற்றில், இக்ளூ ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது அசோக் செல்வன், அபிஹாசன் ஆகியோர் நடிப்பில் உருவாகிவரும் சில நேரங்களில் சில மனிதர்கள் என்ற படத்திலும் நடித்து வருகிறார்.
இன்று ஓணம் பண்டிகையை அடுத்து கேரளாவே கலை கட்டியுள்ளது. சாதி மத பேதமனின்றி அனைவரும் ஓணம் பண்டிகையைக் கொண்டாடுவதால் இந்தப் பண்டிகை இந்தியா முழுவதும் பிரசித்தி பெற்றுள்ளது.
ஓணம் பண்டிகையை அடுத்து நடிகைகள் பெரும்பாலானோர் ஓணம் புடவையில் அலங்கரித்து போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களைக் கவர்ந்து வருகின்றனர். தற்போது அஞ்சு குரியன் வெளியிட்டுள்ள ஓணம் ஸ்பெஷல் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தைக் கலக்கி வருகின்றன.