×

அழகு சித்திரமாய் மனம் கவரும் நடிகை பாவனா!

 

நடிகை பாவனா புடவையில் மின்னும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

தமிழில் சித்திரம் பேசுதடி, ஜெயம் கொண்டான், தீபாவளி, அசல்  உள்பட பல படங்களில் நடித்து பிரபலமானவர்  நடிகை பாவனாசில ஆண்டுகளுக்கு முன்பு நடிகை பாவனா தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். பல்வேறு சர்ச்சைகளால் கொஞ்ச காலம் சினிமாவில் விலகியிருந்த பாவனா, நீண்ட இசைவெளிக்குப் பிறகு தற்போது மீண்டும் களமிறங்கியிருக்கிறார்.

2018-ல் கன்னட தயாரிப்பாளர் நவீனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.  தற்போது மீண்டும் சினிமாவில் களமிறங்கி சில படங்களில் நடித்து வருகிறார். திருமணத்திற்கு பிறகும் பாவனா இளம் நடிகைகளுக்கே டப் கொடுக்கும் அழகுடன் காணப்படுகிறார். தற்போது பாவனா புடவையில் மின்னும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தைக் கலக்கி வருகின்றன.