×

வயது மூப்பு காரணமாக நடிகை பிந்து கோஷ் காலமானார் 
 

 

வயது மூப்பு காரணமாக நடிகை பிந்து கோஷ் காலமானார்.  


80 காலகட்டத்தில் மனோரமா, கோவை சரளா போல காமெடியில் கலக்கியவர் நடிகை பிந்து கோஷ். முன்னணி நடிகர்கள் பலரின் படங்களிலும் இவர் நடித்திருக்கிறார். கிட்டத்தட்ட நூறு படங்களுக்கு மேல் நடித்திருக்கும் இவருக்கு தற்போது 76 வயதாகிறது. வயது மூப்பின் காரணமாக கடந்த சில வருடங்களாக உடல்நலப் பிரச்னையை எதிர்கொண்டுவந்தார்.

அவருக்கு உடலில் பல்வேறு பிரச்னைகள் இருக்கும் நிலையில் மருத்துவ செலவு மற்றும் சாப்பாட்டு செலவுக்கு கூட பணம் இல்லாமல் அவர் கஷ்டப்படுவதாக பல பேட்டிகளில் பேசியிருந்தார். அவரின் நிலையை தெரிந்து கொண்ட நடிகர் விஷால், சின்னத்திரை நிகழ்ச்சி தொகுப்பாளர் கேபிஒய் பாலா, நடிகை ஷகீலா உள்ளிட்டோர் பிந்து கோஷூக்கு உதவி செய்தனர். இந்த நிலையில், இன்று மதியம் 2 மணியளவில் அவர் உடல்நலக் குறைவால் காலமானார். இதனை அவரது மகன்கள் உறுதிப்படுத்தினர்.