×

பால் வண்ண மேனியாய் இருக்கும் தர்ஷா குப்தா... கடற்கரையில் கேஷூவல் லுக் புகைப்படங்கள் !

 

பால் வண்ண மேனியாய் இருக்கும் புகைப்படங்களை நடிகை தர்ஷா குப்தா வெளியிட்டுள்ளார். 

சீரியலில் இருந்து சினிமா வந்து ஜொலிக்கும் நடிகைகள் பட்டியலில் இடம்பிடித்திருக்கிறார் நடிகை தர்ஷா குப்தா. தற்போது இளம் நடிகையாக களமிறங்கியுள்ள அவர், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான ‘முள்ளும் மலரும்” என்ற சீரியலில் மூலமாக சின்னத்திரைக்கு வந்தார். முதல் சீரியலில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதால், மின்னலே, செந்தூரப்பூவே என அடுத்தடுத்து சீரியல்களில் நடித்தார்.  

சீரியலில் ஏற்பட்ட பிரபலத்தால் விஜய் டிவியில் ஒளிப்பரப்பான  ‘குக் வித் கோமாளி’  சீசன் 2 நிகழ்ச்சியிலும் பங்கேற்று ரசிகர்களை கவர்ந்தார். மோகன் ஜி இயக்கத்தில் வெளியான ‘ருத்ரதாண்டவம்’ படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த படத்தில் தர்ஷாவின் நடிப்புக்கு நல்ல வரவேற்பு இருந்தது. இதனால் அடுத்தடுத்த படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார். 

இந்நிலையில் புதிய பட வாய்ப்புகளை பெற தொடர்ந்து போட்டோஷூட்டுகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் கடற்கரை ஒன்றில் பால் வண்ண மேனியாய் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த ஸ்டைலான புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ள நிலையில் சமூக வலைத்தளத்தில் லைக்குகளை குவித்து வருகிறது.