×

தமிழ் மக்களிடம் மன்னிப்பு கேட்ட நடிகை தன்யா

 

தமிழர்களை இழிவுபடுத்தி கருத்து பதிவிட்டதாக கூறப்படும் நடிகை தன்யா பாலகிருஷ்ணாவுக்கு ‘லால் சலாம்’ படத்தில் வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பதற்கு சமூக வலைதளங்களில் எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து அவர் தன் மீதான சர்ச்சைக்கு தற்போது விளக்கம் அளித்துள்ளார். அத்துடன், அவர் மன்னிப்பும் கோரியுள்ளார். இது தொடர்பான அவரின் விளக்கம்: “நான்‌ செய்யும்‌ தொழில்‌ மேல்‌ சத்தியம்‌. கடந்த சில நாட்களாகச்‌ சமூக வலைதளங்களில்‌ தமிழர்களை இழிவுபடுத்தும்‌ விதமாக நான்‌ கூறியதாகப்‌ பகிரப்பட்டு வரும்‌ கருத்து நான்‌ கூறியதே அல்ல. 12 வருடம்‌ முன்பு இது நடந்தபோதே நான்‌ இதைத்‌ தெளிவுபடுத்த முயன்றேன்‌. அதையே இப்பொழுதும்‌ சொல்லிக்‌ கொள்ளவிரும்புகிறேன்‌. அந்தப் பதிவை நான்‌ பதிவிடவே இல்லை. 

இருப்பினும் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன், அது தன்னுடயை கருத்தே இல்லை என்று விளக்கம் அளித்துள்ளார்.