×

ப்பபா... என்ன லுக்... டிம்பிள் ஹயாதியின் ஸ்டைலிஷ் புகைப்படங்கள் !

 

நடிகை டிம்பிள் ஹயாத்தியின் கலக்கல் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

தென்னியாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் டிம்பிள் ஹயாத்தி. தெலுங்கு நடிகையான இவர், ‘கல்ஃப்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். முதல் படம் வெளியானதற்கு பிறகு 2 ஆண்டுகள் கழித்து பிரபுதேவா நடிப்பில் வெளியான ‘தேவி 2’ படத்தின் மூலம் தமிழில் நடித்தார். 

பின்னர் மீண்டும் தெலுங்கில் ‘கட்டலகொண்டா கணேஷ்’ என்ற படத்தில் ஐட்டம் பாடலுக்கு நடனம் ஆடினார். அதன்பிறகு தனுஷ் நடிப்பில் வெளியான ‘அட்ரங்கி ரே’ படத்தின் மூலம் இந்தியிலும் அறிமுகமானார். இதையடுத்து விஷாலின் ‘வீரமே வாகை சூடும்’ படத்தில் கதாநாயகியாக நடித்தார்.  

இப்படி தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் நடித்து வருகிறார். இந்நிலையில் அழகான தோற்றத்தில் இருக்கும் புகைப்படங்களை டிம்பிள் ஹயாத்தி வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.