×

ஒரே ஒரு பாட்டுக்கு டான்ஸ் ஆடி கோடிகளில் சம்பளம் வாங்கிய நடிகை -யார் தெரியுமா ?

 

இப்போதேல்லாம் முன்னணி நடிகைகள் கூட ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் டான்ஸ் ஆடி வருகின்றனர் .அந்த புஷ்பா படத்தில் சமந்தா ஊ சொல்றியா என்ற பாடலுக்கு ஆடினார் .த்ரிஷா கூட விஜயின் கோட் படத்தில் ஆடினார் .தமன்னா ஜெயிலர் படத்தில் ஒரே பாடலுக்கு ஆடினார் அது போல் கூலி படத்திலும் ஒரு நடிகை ஒரே பாடலுக்கு ஆடியுள்ளார் 

பூஜா ஹெக்டே, முதன்முதலில் அறிமுகம் ஆனது தமிழில் வெளியான ‘முகமூடி’ திரைப்படம் மூலமாகத்தான். இந்த படத்தில் நடித்த போது, அவருக்கு தமிழும் தெரியாது, சரியாக நடிக்கவும் வராது. பல காட்சிகளில் சிரித்த முகத்துடன் மட்டுமே தோன்றுவார். இதனால், படம் வந்த புதிதில் இவரை பலரும் ட்ரோல் செய்தனர். இதனால், தமிழ் திரையுலகிற்கு ஒரு பெரிய கும்புடு போட்டு விட்டு கிளம்பிய இவர், பின்பு தெலுங்கு திரையுலகில் பெரும் நடிகையாக ஜொலிக்க ஆரம்பித்ததார்.

 இவர் மீண்டும் தமிழுக்கு வந்தது, விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் மூலமாகத்தான். ஆனால், இந்த படமும் பெரிய வெற்றியை அடையவில்லை. இதன் பிறகு, ரெட்ரோ படத்தில் நடித்தார். தற்போது, விஜய்க்கு 2வது முறை ஜோடி ஆகியிருக்கிறார். ஜன நாயகன் படத்தில் இவர்தான் கதாநாயகி. இந்த படத்தின் தனது பங்கு ஷூட்டிங்கை சமீபத்தில்தான் நடித்து முடித்திருந்தார். பூஜா, தொடர்ந்து இந்தி படங்களிலும் நடித்து வருகிறார். கூலி படத்திற்கு பிறகு ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாட மீண்டும் இவருக்கு பல படங்களில் இருந்து அழைப்பு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.பூஜா, ‘மோனிகா’ பாடலுக்கு நடனமாட ரூ.2-3 கோடி வரை சம்பளம் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது