'ரவுடி பேபி'-ஆக மிரட்டும் ஹன்சிகா... ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !
ஹன்சிகாவின் நடிப்பில் உருவாகியுள்ள 'ரவுடி பேபி' படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் ஆர்யா வெளியிட்டுள்ளார்.
தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார் நடிகை ஹன்சிகா. அந்த வகையில் நடிகை ஹன்சிகாவின் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'ரவுடி பேபி'. இந்த படத்தை அறிமுக இயக்குனர் ராஜு சரவணன் இயக்கி வருகிறார். இந்த படத்தை அபிஷேக் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் ரமேஷ் பி.பிள்ளை தயாரித்து வருகிறார்.
இந்த படத்தில் ஹன்சிகாவுடன் இணைந்து சத்யராஜ், மீனா, ராம்கி, சோனியா அகர்வால், ராய் லட்சுமி, ஜான் கொக்கென் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சாம் சிஎஸ் இசையில் உருவாகும் இப்படத்திற்கு செல்லத்துரை ஒளிப்பதிவாளராக பணியாற்றி உள்ளார். கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட இப்படத்தின் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
விரைவில் வெளியாக உள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. இந்த ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் ஆர்யா வெளியிட்டுள்ளார். ஹன்சிகாவின் இந்த போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதில் கொடூரமான லுக்கில் இருக்கும் ரத்த கரையுடன் நிற்கிறார். இந்த போஸ்டர் படத்திற்கான எதிர்பார்பை கூட்டியுள்ளது.