இப்படியெல்லாம் போட்டோஷூட்டா.. இணையத்தை கலக்கும் ஐஸ்வர்யா மேனன் !
அசத்தலான லுக்கில் இருக்கும் புகைப்படங்களை நடிகை ஐஸ்வர்யா மேனன் வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக இருப்பவர் ஐஸ்வர்யா மேனன். கேரளாவை பூர்வீகமாக கொண்ட அவர், ஈரோட்டில் வளர்ந்தவர். தமிழில் கடந்த 2013ம் ஆண்டு வெளியான “ஆப்பிள் பெண்ணே” என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பிறகு தீயா வேலை செய்யணும் குமாரு,காதலில் சொதப்புவது எப்படி, வீரா, தமிழ் படம் 2, நான் சிரித்தால், வேழம், தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.
தெலுங்கில் கேரி இயக்கத்தில் நிகில் சித்தார்த் நடிப்பில் உருவாகம் ‘ஸ்பை’ படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். தமிழை தவிர தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் பிசியாக நடிகையாக வலம் வருகிறார். இவரது நடிப்பு ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று வரும் நிலையில் புதிய வாய்ப்புகள் குவிந்து வருகிறது.
அதேநேரம் கிளாமர் இருக்கும் புதிய போட்டோஷூட்டுகளை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். அவரது புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. அந்த வகையில் சிவப்பு நிற உடையில் கிளாமரில் இருக்கும் புகைப்படங்களை ஐஸ்வர்யா மேனன் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.