×

2k இளசுகளின் மனம் கவர்ந்த நாயகி.. நடிகை இவானாவின் லேட்டஸ்ட் க்ளிக் !

 

நடிகை இவானாவின் கலக்கலான புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. 

2k  இளசுகளின் மனம் கவர்ந்த நாயகியாக சினிமாவில் வலம் வருபவர் ‘இவானா’. கேரள இளம் நடிகையான அவர், மலையாளத்தில் கடந்த 2012-ஆம் ஆண்டு வெளியான ‘மாஸ்டர்ஸ்’ படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். ராணி பத்மினி, அனுராக கரிக்கின் வெல்லம் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

அதன்பிறகு தமிழில் பாலாவின் 'நாச்சியார்' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். பின்னர் சிவகார்த்திகேயனின் ‘ஹீரோ’ படத்திலும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார்.  இதையடுத்து மீண்டும் மலையாளத்தில் ‘பயன்கரம்’  படத்தில் நடித்தார். ஆனால் இந்த படங்கள் எதுவும் இவானாவிற்கு பெரிய வெற்றியை கொடுக்கவில்லை. 

இதைத்தொடர்ந்து சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த 'லவ் டுடே' படத்தில் கதாநாயகியாக இவானா நடித்திருந்தார். இந்தப் படத்தின் மூலம் ஓவர் நைட்டில் மிகவும் பிரபலமான நடிகையாக மாறினார். பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளியான இப்படம் வெறும் 4 கோடி பட்ஜெட் எடுக்கப்பட்டு 50 கோடி வசூல் சாதனை படைத்தது. 

இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு கிரிக்கெட் வீரர் தோனி தயாரிக்கும் 'எல்ஜிஎம்' படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இதுதவிர தெலுங்கிலும் வாரிசு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கும் ‘செல்பிஸ்’ ‌படத்தில் ஆசீசுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

இப்படி தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் பிசியான நடிகையாக இவானா மாறிவிட்டார். இந்நிலையில் க்யூட் லுக்கில் இருக்கும் புகைப்படங்களை இவானா வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.