×

இளசுகளின் மனதை கொள்ளையடிக்கும் இவானா.. க்யூட் லுக் புகைப்படங்கள் !

 

நடிகை இவானாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களின் கவனம் ஈர்த்துள்ளது. 

2k  இளசுகளின் மனம் கவர்ந்த நாயகியாக சினிமாவில் வலம் வருபவர் ‘இவானா’. கேரள இளம் நடிகையான அவர், மலையாளத்தில் கடந்த 2012-ஆம் ஆண்டு வெளியான ‘மாஸ்டர்ஸ்’ படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். ராணி பத்மினி, அனுராக கரிக்கின் வெல்லம் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

அதன்பிறகு தமிழில் பாலாவின் 'நாச்சியார்' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். பின்னர் சிவகார்த்திகேயனின் ‘ஹீரோ’ படத்திலும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார்.  இதையடுத்து மீண்டும் மலையாளத்தில் ‘பயன்கரம்’  படத்தில் நடித்தார். ஆனால் இந்த படங்கள் எதுவும் இவானாவிற்கு பெரிய வெற்றியை கொடுக்கவில்லை. 

இதைத்தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த 'லவ் டுடே' படம் மூலம் ரசிகர்களின் கவனம் ஈர்த்தார் இவானா. தற்போது தோனி தயாரிப்பில் ஹரிஷ் கல்யாணியுடன் இணைந்து ‘எல்ஜிஎம்’ படத்தில் நடித்தள்ளார். இந்த படத்திலும் சிறப்பாக நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்று வருகிறார். இந்நிலையில் க்யூட் லுக்கில் இருக்கும் புகைப்படங்களை இவானா வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனம் பெற்றுள்ளது.