நடிகை ஜனனி ஐயருக்கு விரைவில் டும்.. டும்..டும்.. திருமண நிச்சயதார்த்த புகைப்படங்கள் வைரல்...!
Updated: Apr 16, 2025, 18:58 IST
நடிகை ஜனனி ஐயருக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.
தமிழ் மற்றும் மலையாள திரைப்பட நடிகையான ஜனனி ஐயர் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமாணவர். இவர் நடித்த 2014-ம் ஆண்டு வெளியான தெகிடி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதன் பிறகு அவர் ஏராளமான படங்களில் ஹீரோயினாக நடித்து இருக்கிறார்.
இந்நிலையில் இன்று ஜனனி ஐயருக்கு சாய் ரோஷன் ஷாம் என்பவருடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. விரைவில் திருமணம் நடைபெறவுள்ளது. இந்நிலையில், நிச்சயதார்த்த புகைப்படங்களை ஜனனி வெளியிட்டுள்ளார்.