பல வருட காத்திருப்பு, பிரபல நடிகைக்கு இரட்டை குழந்தை : நடிகை போட்ட பதிவு
Jul 26, 2024, 13:00 IST
ஜீ தமிழில் ஒளிபரப்பான சத்யா சீரியல் மூலம் பிரபலம் ஆனவர் நடிகை ஜுலி என்கிற விசாலாட்சி. இவர் பாலா திரைப்படங்களிலும் நடித்துள்ளார். நடிகையாக கலக்கினாலும் இவர் டான்ஸராகவும் விஜய் டிவி ஜோடி நிகழ்ச்சிகளில் கலக்கினார். சத்யா சீரியல், சித்திரம் பேசுதடி போன்ற தொடர்கள் இவருக்கு நல்ல பெயர் பெற்று கொடுத்தது.
இந்த நிலையில் இவர் திருமணத்திற்கு பிறகு 10 வருடங்களாக குழந்தை இல்லாமல் கஷ்டப்பட்ட நிலையில் கர்ப்பமாக இருப்பதாக சில நாட்களுக்கு முன் பேட்டி கொடுத்திருந்தார். அதன் பின் நடிகை ஜுலிக்கு சில தினங்களுக்கு முன்பு தான் கோலாகலமாக வளைகாப்பு நடந்தது. இந்த நிலையில் நடிகை ஜுலிக்கு நேற்று (ஜுலை 25) இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது. ஒரு மகன் மற்றும் மகள் பிறந்துள்ளதாக அவர் தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.