×

வெறித்தனமாக ஒர்க்கவுட் செய்யும் ஜோதிகா.. வைரலாகும் வீடியோ !

 

கடுமையாக உடற்பயிற்சி செய்யும் நடிகை ஜோதிகாவின் உடற்பயிற்சி வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

 தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை ஜோதிகா.  சூர்யாவின் பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.  அதன்பிறகு ரஜினி, கமல், விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்கள் அனைவருடனும் இணைந்து நடித்துள்ளார்.

தன்னுடன் பல படங்களில் நடித்த முன்னணி நடிகரான சூர்யாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்த ஜோதிகா, ‘36 வயதினிலே’ படத்தின் மூலம் சினிமாவிற்கு ரீ என்ட்ரி கொடுத்தார். கடந்த சில ஆண்டுகளாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். 

இதையடுத்து கடைசியாக மலையாள சூப்பர் மம்மூட்டி நடிக்கும் ‘காதல் தி கோர்’ என்ற படத்தில் நடித்து முடித்தார். இந்நிலையில் நடிகை ஜோதிகா தீவிரமாக உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். கடுமையாக உடற்பயிற்சி செய்யும் இந்த வீடியோ இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.