×

இளசுகளை கிறங்கடிக்கும் கீர்த்தி சுரேஷ்... லைக்குகளை குவிக்கும் புகைப்படங்கள் !

 

ரசிகர்களை கிறங்கடிக்கும் வகையில் இருக்கும் புகைப்படங்களை நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிட்டுள்ளார். 

தென்னிந்தியாவில் நடிகை கீர்த்தி சுரேஷுக்கென்று தனி கூட்டமே உள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார். தன்னுடைய க்யூட் நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார். சமீபத்தில் தெலுங்கு நடிகர் நனியுடன் இணைந்து கீர்த்தி சுரேஷ் நடித்த 'தசரா'  திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. 

தமிழில் உதயநிதியுடன் ‘மாமன்னன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது. இதுதவிர தமிழில் சில முன்னணி ஹீரோக்களின் திரைப்படங்களில் நடித்துள்ளார். அதேபோன்று தெலுங்கில் சில படங்களில் முடித்துள்ளார். இந்த படங்கள் விரைவில் வெளியாகவுள்ளது. 

இந்நிலையில் ஸ்டைல் லுக்கில் இருக்கும் புகைப்படங்களை நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிட்டுள்ளார். இணையத்தில் வெளியாகியுள்ள இந்த புகைப்படங்கள் 9 லட்சம் லைக்குகளை குவித்துள்ளது. தற்போது இந்த புகைப்படங்கள் தீயாய் வைரலாகி வருகிறது.