சூப்பராக யோகா செய்து அசத்தும் கீர்த்தி சுரேஷ்.. வைரல் வீடியோ
நடிகை கீர்த்தி சுரேஷ், யோகா செய்து அசத்தும் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.
உலக முழுவதும் இன்று சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 2014-ஆம் முதல் இந்த தினத்தை உலகம் முழுவதும் 177 நாடுகள் யோகா தினத்தை கொண்டாடி வருகின்றனர். இந்தியாவில் மட்டும் 90-க்கும் மேற்பட்ட நகரங்களில் யோகா தினம் கொண்டாடப்பட்டது.
கர்நாடகம் மாநிலம் மைசூரில் நடைபெற்ற யோகா கலந்துக்கொண்ட பிரதமர் மோடி யோகா செய்து அசத்தினார். இதுதவிர திரையுலகை சார்ந்த பல முன்னணி நடிகர், நடிகைகளும் யோகா தினத்தை கொண்டாடினர். இந்நிலையில் தென்னிந்தியாவில் பிரபல நடிகையான கீர்த்தி பல விதமான யோகாவை செய்து அசத்திய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் நடித்து வரும் கீர்த்தி, தற்போது மலையாளத்தில் ‘வாஷி‘ படத்தில் நடித்து முடித்துள்ளார். கடைசியாக அவர் நடித்த சாணிக் காயிதம், ‘சர்க்காரு வாரி பாட்டா’ ஆகிய திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.