எக்ஸ் தள பக்கத்தை மீட்டெடுத்த நடிகை குஷ்பு... அனைவருக்கும் நன்றி என பதிவு...
May 5, 2025, 19:10 IST
நடிகையும் பா.ஜ., பிரமுகருமான குஷ்புவின் எக்ஸ் தள பக்கம் ஹேக் செய்யப்பட்ட நிலையில், அதனை மீட்டெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
நடிகை குஷ்பு வெளியிட்ட பதிவில் எக்ஸ் தளத்தில் எனது இமெயில் முகவரியை ஹேக்கர்கள் மாற்றி உள்ளனர். ஹேக் செய்யப்பட்ட எக்ஸ் தள கணக்கை சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன் என தெரிவித்திருந்தார். இந்நிலையில், தற்போது எக்ஸ் தள பக்கத்தை மீட்டெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.