×

திரிஷாவை தொடர்ந்து லியோ படத்தில் விஜய்யுடன் பல ஆண்டுகளுக்கு பின்னர் இணையும் கிளாமர் நடிகை.

 

லியோ திரைப்படம் கோலிவுட்டின் ஒட்டு மொத்த எதிர்பார்ப்பாக உருவாகி வருகிறது. ஆக்ஷன் அதிரடி நிறைந்த இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்து வருகின்றனர். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்த படத்தில், சஞ்சய் தத், திரிஷா, கௌதம் மேனன், மிஷ்கின், அர்ஜூன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த நிலையில் படத்தின் முதல் பாடலான “நான் வரவா” பாடலுக்கு விஜய்யுடன் இணைந்து நடிகை கிரண் ஆட்டம் போட்டுள்ளதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

வரும் அக்டோபர் மாதம் படம் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் படம் குறித்த அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளியாவது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பல முன்னணி நடிகர் நடிகைகள் நடிக்கும் லியோவில் கிரண் சிறப்பு தோற்றத்தில் வருவது 90’ஸ் கிட்ஸ் மத்தியில் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு காரணம் விஜய், கிரண் இருவரும் ‘திருமலை’ படத்தில் ‘வாடியம்மா’ பாடலுக்கு குத்தாட்டம் போட்டதுதான்.