×

 மயக்க வைக்கும் மாளவிகா மோகனன்... லைக்குகளை குவிக்கும் புகைப்படங்கள் !

 

நடிகை மாளவிகா மோகனின் மயக்க வைக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. 

தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் நடித்து வருபவர் நடிகை மாளவிகா மோகனன். தென்னிந்தியாவில் புகழ்பெற்று இருக்கும் இவர், மலையாள படம் ஒன்றின் மூலம் அறிமுகமானவர்.  தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'பேட்ட' படத்தில் பூங்கொடியாக தோன்றி ரசிகர்களை கவர்ந்தார். அதன்பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான 'மாஸ்டர்' படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தார்‌. 

சின்ன கதாபாத்திரமாக இருந்தாலும் ரசிகர்களை கவரும் வகையில் இருந்தது. இந்த படத்திற்கு பிறகு தனுஷின் 'மாறன்'படத்தில் பத்திரிகையாளர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்தி மற்றும் தெலுங்கில் பிசியாக நடித்து வருகிறார்.  தற்பாது விக்ரமின் ‘தங்கலான்’ படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். 

இந்நிலையில் மயக்கும் வகையில் லுக்கில் இருக்கும் புகைப்படங்களை மாளவிகா மோகனன் வெளியிட்டுள்ளார். புடவையில் ஸ்டைலிஷ் லுக்கில் இருக்கும் அந்த புகைப்படங்கள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.