நடிகை மஞ்சு வாரியரிடம் அத்துமீறல்..? வீடியோ வைரல்...!
May 3, 2025, 16:41 IST
கடைதிறப்பு விழாவுக்குச் சென்ற நடிகை மஞ்சு வாரியரிடம் ரசிகர்கள் தவறாக நடந்துகொண்டதாக இணையத்தில் விடியோ வைரலாகி வருகிறது.
மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருக்கும் மஞ்சு வாரியர் தமிழில் அசுரன் படத்தின் மூலம் பிரபலமானார்.
பின்னர் அஜித், ரஜினி படங்களில் நடித்தார். கடைசியாக தமிழில் விடுதலை 2 படத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில் நேற்று (மே.2) கடை திறப்பு விழாவுக்குச் சென்ற மஞ்சு வாரியரைப் பார்க்க கூட்டம் கூடியது.
கூட்டத்தினைக் கண்ட மஞ்சு வாரியர் காரில் ஏறி நின்று கை அசைத்துக்கொண்டிருப்பார்.
இந்தக் கூட்டத்திற்கு நடுவில் யாரோ ஒருவர் மஞ்சு வாரியரின் இடுப்புப் பகுதியில் கை வைப்பதாக வீடியோவில் பதிவாகியுள்ளது.