அம்மாவுடன் அழகில் மின்னும் தெறி பேபி... வைரலாகும் புகைப்படங்கள்!
நடிகை மீனா மகளுடன் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தைக் கலக்கி வருகின்றன.
தமிழ் சினிமாவில் 90-களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை மீனா. குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான அவர் அதன் பின்னர் இளைஞர்களின் கனவுக் கன்னியாக மாறினார். ரஜினி படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த அவர் பின்னாளில் முத்து படத்தின் மூலம் ரஜினிக்கே ஜோடியாக நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளிலும் நடித்து புகழ்பெற்றுள்ளார். நடிகை மீனாவின் மகள் நைனிகாவும் தெறி படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அந்தப் படத்தில் விஜய்க்கு மகளாக நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றார் நைனிகா.
தற்போது மீனா மகளுடன் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தைக் கலக்கி வருகின்றன. தெறி படத்தில் குழந்தையாக பார்த்த நைனிகா தற்போது வளர்ந்து மின்னும் அழகில் காணப்படுகிறார்.