×

அழகியே.. ஜொலிக்கும் நடிகை மிருணாளினி ரவி !

 

 அழகிய லுக்கில் இருக்கும் புகைப்படங்களை மிருணாளினி ரவி வெளியிட்டுள்ளார். 

தமிழ் சினிமாவில் இளம் நடிகைகளில் ஒருவராக வலம் வர தொடங்கியிருக்கிறார் மிருணாளினி ரவி. முதலில் பிரபல சமூக வலைத்தளமான டப்மாஷ் மூலம் பிரபலமானார். இதன் மூலம் கிடைத்த புகழை வைத்து கடந்த 2019-ஆம் ஆண்டு தியாகராஜா குமாரராஜா இயக்கத்தில் வெளியான 'சூப்பர் டீலக்ஸ்' படத்தில் நடிகையாக அறிமுகமானார்.

அந்த படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும், ரசிகர்களின் கவனம் ஈர்த்தார். அதனால்  சுசீந்திரனின்  'சாம்பியன்' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகப்படுத்தப்பட்டார். அதன்பிறகு பொன்ராம் இயக்கத்தில் வெளியான ’எம்ஜிஆர் மகன்’ படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாகவும், ஜாங்கோ என்ற பேண்டஸி படத்தில் நடித்தார். பின்னர் விஷாலுடன் ‘எனிமி’ படத்தில் நடித்து மிகவும் பிரபலமானார். இதையடுத்து ‘கோப்ரா’ உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். 

தமிழை தவிர தெலுங்கில் நடித்து வரும் அவர், தற்போது இரண்டு தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். அதனால் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் நடித்து வரும் நடிகையாக மாறியுள்ளார். ஆரம்பத்தில் கவர்ச்சி காட்டாத நடிகையாக இருந்த இவர், தற்போது கவர்ச்சி ரூட்டிற்கு மெல்ல மெல்ல நகர ஆரம்பித்திருக்கிறார்.

இந்நிலையில் அழகிய லுக்கில் இருக்கும் புகைப்படங்களை மிருணாளினி வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.