×

விஜய்க்கு ஜோடியாக நடித்த மகேஷ்பாபுவின் மனைவி… திருமலை படத்தின் சுவாரசியப் பின்னணி!

விஜய் நடித்த ‘திருமலை’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதலில் நடிகை நம்ரதா தான் நடித்துள்ளார். விஜய் மற்றும் ஜோதிகா நடிப்பில் உருவான திருமலை படம் 2003-m ஆண்டு வெளியானது. இன்றோடு(24-10-2020) அந்தப் படம் வெளியாகி இன்றோடு 17 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இயக்குனர் ரமணா இயக்கத்தில் உருவான இப்படத்தை கே. பாலச்சந்தரின் கவிதாலயா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்தது. குஷி படத்தில் நடித்த விஜய்- ஜோதிகா கூட்டணி மூன்றாண்டுகளுக்குப் பிறகு திருமலை படத்தில் சேர்ந்து நடித்திருந்தனர். திருமலை படத்தில் முதலில்
 

விஜய் நடித்த ‘திருமலை’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதலில் நடிகை நம்ரதா தான் நடித்துள்ளார்.

விஜய் மற்றும் ஜோதிகா நடிப்பில் உருவான திருமலை படம் 2003-m ஆண்டு வெளியானது. இன்றோடு(24-10-2020) அந்தப் படம் வெளியாகி இன்றோடு 17 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இயக்குனர் ரமணா இயக்கத்தில் உருவான இப்படத்தை கே. பாலச்சந்தரின் கவிதாலயா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்தது.

குஷி படத்தில் நடித்த விஜய்- ஜோதிகா கூட்டணி மூன்றாண்டுகளுக்குப் பிறகு திருமலை படத்தில் சேர்ந்து நடித்திருந்தனர்.


திருமலை படத்தில் முதலில் கதாநாயகியாக நடித்து வந்தது தெலுங்கு ஸ்டார் மகேஷ் பாபுவின் மனைவி நம்ரதா தான். அவரை வைத்து சில காட்சிகளும் அப்படத்தில் எடுக்கப்பட்டுள்ளது. பின்னர் சில காரணங்களால் அவர் இந்த படத்தில் இருந்து விலகவே, ஜோதிகா திருமலை படத்தில் இணைந்துள்ளார்.

விஜயின் வெற்றி பயணத்தில் திருமலை படத்திற்கும் ஒரு முக்கிய பங்கு உண்டு. அதுவரை ரொமான்ஸ் ஹீரோவாக இருந்து வந்த விஜய் திருமலை படத்திலிருந்து தான் ஆக்ஷன் ஹீரோ என்ற முத்திரை பதிக்க ஆரம்பித்தார். கில்லி படம் தான் விஜய்யின் சினிமா கேரியரை திசை திருப்பிய படம் என்று அனைவரும் கூறுவது உண்டு. ஆனாலும் திருமலை படத்திற்கும் விஜயின் சினிமா வாழ்க்கையை தூக்கிவிட்டதில் முக்கிய பங்கு உண்டு.


இன்றோடு திருமலை படம் வெளியாகி 17 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து விஜய் ரசிகர்கள் சமூக ஊடகங்களில் அதைக் கொண்டாடி வருகின்றனர். #17YearsofThirumalai என்ற ஹாஷ்டாக் ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.