சமந்தாவை தொடர்ந்து பிரபல நடிகைக்கு அரிய வகை நோய்.. ஆறுதல் சொல்லும் ரசிகர்கள் !
நடிகை சமந்தா போன்று அரிய வகை நோயால் நடிகை நந்திதா ஸ்வேதா பாதிக்கப்பட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் நந்திதா ஸ்வேதா. பா ரஞ்சித்தின் முதல் படமான ‘அட்டகத்தி’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதன்பிறகு எதிர் நீச்சல், இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது வாய்ப்பு இல்லாததால் சினிமாவை விட்டு ஒதுங்கியுள்ளார்.
இந்நிலையில் நடிகை நந்திதா ஸ்வேதா, வினோதமான தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், பைப்ரோமியால்ஜியா என்ற தசை கோளாறால் நான் பாதிக்கப்பட்டுள்ளேன். இந்த நோய் என் உடல் எடையை கடுமையாக குறைத்துள்ளது. ஒரு சிறிய வேலையை செய்ததால் கூட அது தசைகளில் பிரச்சனையை உண்டாக்குகிறது. அதனால் என்னால் உடற்பயிற்சி கூட செய்ய முடியவில்லை.
சில நேரங்களில் எழுந்து நடப்பதற்கு கூட கடினமாக இருக்கிறது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் தசை மற்றும் மூட்டுகளில் கடுமையான வலி இருக்கும். மோசமான நினைவாற்றல் போன்ற விஷயங்களால் பாதிக்கப்படுவீர்கள். இவ்வளவு பிரச்சனையுடனேயே அடுத்த படத்திற்காக பணியாற்றியுள்ளேன் என்று கூறியுள்ளார்.