×

பிரபல திரையரங்கை வாங்கிய நயன்தாரா... செம்ம பிளானில் களமிறங்கும் விக்கி-நயன் தம்பதி !

 

 பிரபல திரையரங்கு ஒன்றை நடிகை நயன்தாரா வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தென்னிந்தியாவில் பிரபல நடிகையாக இருப்பவர் நடிகை நயன்தாரா. கடந்த ஆண்டு இயக்குனர் விக்னேஷ் திருமணம் செய்துக்கொண்டார். திருமணத்திற்கு பிறகும் பிசியாக திரைப்படங்களில் நடித்து வருகிறார். சினிமாவில் இருப்பதோடு பல தொழில்களில் முதலீடு செய்து வருகிறார். 

முதலில் கணவர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து ரௌடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்து புதிய படங்களை தயாரித்து வருகிறார். இதுதவிர காஸ்மெட்டிக் உள்ளிட்ட சில தொழில்களில் முதலீடு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 

இந்நிலையில் சென்னையில் உள்ள பிரபல திரையரங்கு ஒன்றை தனது நண்பர்களுடன் இணைந்து விலைக்கு வாங்கியுள்ளார். வட சென்னையின் பழமையான திரையரங்குகளில் ஒன்றான அகஸ்தியா தான் அந்த திரையங்கம். அந்த திரையரங்கை நவீன வசதிகளுடன் கூடிய மல்டி ப்ளக்ஸ் திரையரங்காக மாற்ற நயன்தாரா முடிவு செய்துள்ளார். தற்போது அந்த திரையரங்கை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகறது. இன்னும் ஓராண்டுக்குள் புதுப்பொலிவுடன் இந்த திரையரங்கு திறக்கப்படும் என்று கூறப்படுகிறது.