உயிர்.. உலக்குடன் நயன்தாரா... இணையத்தை கவர்ந்த புகைப்படம் !
தனது குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்களை நடிகை நயன்தாரா வெளியிட்டுள்ளார்.
கடந்த 20 ஆண்டுகளாக தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக கோலோச்சி வருபவர் நயன்தாரா. தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.
பிசியான நடிகையாக இருந்து வரும் நயன்தாரா, தனது நீண்ட நாள் காதலனான இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் திருமணம் செய்துக்கொண்டார். திருமணமாகி 4 மாதத்தில் தங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்திருப்பதாக கூறி இன்ப அதிர்ச்சி கொடுத்தார். அதன்பிறகு அந்த குழந்தைகள் வாடகை தாய் மூலம் பிறந்தது என அறிவித்தனர்.
தனது இரட்டை குழந்தைகளுக்கு உயிர் தெய்விக் N சிவன் மற்றும் உலக் தெய்விக் N சிவன் என்று பெயர் வைத்துள்ளார். அவ்வெப்போது தனது குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்களை நயன்தாரா வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது தனது இரட்டை குழந்தைகளுடன் இருக்கும் க்யூட் புகைப்படம் ஒன்றை நயன்தாரா வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.