×

குளு குளு வெண்பனி போலே... நடிகை நிவேதா பெத்துராஜின் அசத்தல் போட்டோஷூட்!

 

நடிகை நிவேதா பெத்துராஜின் லேட்டஸ்ட் கேசுவல் போட்டோஷூட் புகைப்படங்கள் பார்ப்போரைக் கவர்ந்து வருகின்றன. 

தற்போது தெலுங்கு சினிமாவில் பிஸியான நடிகையாக வலம் வரும் நிவேதா பெத்துராஜ் 'ஒரு நாள் கூத்து’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பின்னர் ‘பொதுவாக என் மனசு தங்கம்’, ‘டிக் டிக் டிக்’, திமிரு பிடிச்சவன் போன்ற படங்களில் நடித்தார்.   

பின்னர் தெலுங்கிலும் என்ட்ரி கொடுத்த நிவேதா பெத்துராஜ் தற்போது டோலிவுட்டில் முன்னணி நடிகையாக வளர்ந்து வருகிறார்.  தெலுங்கு படங்களான ‘சித்ரலஹரி’ மற்றும் ‘ப்ரோச்சேவரேவரா’ ஆகியவற்றில் நடித்துள்ளார். அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான ஆலவைகுண்டபுரம்லோ மற்றும் தடம் படத்தின் தெலுங்கு ரீமேக் ரெட் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். 

தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் சில படங்களில்  நடித்து வருகிறார். தற்போது நிவேதா கேசுவலாக செம எனர்ஜிடிக் ஆக காணப்படும் போட்டோஷூட் புகைப்படங்களுக்கு இளைஞர்கள் தங்கள் இதயங்களை வழங்கி வருகின்றனர்.