×

தனுஷ் படத்தில் நடித்த அருவி பட புகழ் நடிகை?

 

தனுஷ் நடித்துள்ள கேப்டன் மில்லர் திரைப்படத்தில் அருவி பட புகழ் அதிதி பாலன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

அருவி படம் மூலம் அறிமுகமானவர் நடிகை அதிதி பாலன். இவர் நடித்த முதல் படத்திலேயே அத்தனை வரவேற்பை பெற்றார். நீண்ட வசனங்களால் மிக பெரிய ரசிகர் கூட்டத்தை பெற்றார். அதிதி பாலன் தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களில் பணிபுரியும் ஒரு இந்திய நடிகை. இவர் நடனக் கலைஞர் மற்றும் மாடல் ஆவார். அருவி திரைப்படத்தில் அருவியாக நடித்ததற்காக அவர் மிகவும் பிரபலமானவர். அதிதி பாலன் மலையாளத்தில் வெளியான கோல்ட் கேஸ் படத்தின் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தில் ஒரு நிருபராக நடித்துள்ளார். அமானுஷங்கள் நிறைந்த காட்சிகளுடன் அதை கண்டுபிடிக்கும் காட்சிகளிலும் அருமையாக நடித்துள்ளார்.

அண்மையில் அவரது நடிப்பில் கருமேகங்கள் கலைகின்றன என்ற திரைப்படம் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்நிலையில், தனுஷ் நடிக்கும் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது.