×

 காதலரை கரம் பிடித்த நடிகை பார்வதி நாயர்...!

 

நடிகை பார்வதி நாயர் - தொழிலதிபர் ஆஷ்ரித் அசோக் திருமணம் விமரிசையாக நடைபெற்றது. 

மலையாள நடிகையான பார்வதி நாயர் தமிழில் உத்தம வில்லன், மாலை நேரத்து மயக்கம், எங்கிட்ட மோதாதே, நிமிர், சீதக்காதி, என்னை அறிந்தால், கோடிட்ட இடங்களை நிரப்புக உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். விஜய்யின் 'தி கோட்' படத்திலும் நடித்திருந்தார். நடிகை பார்வதி நாயருக்கும், தொழிலதிபர் ஆஷ்ரித் அசோக் என்பவருக்கும் காதல் மலர்ந்தது சில தினங்களுக்கு முன்பு இவர்களின் நிச்சயதார்த்தம் முடிந்தது.

பார்வதி நாயர், ஆஷ்ரித் அசோக் திருமணம் சென்னையில் நேற்று நடந்தது. இதில் உறவினர்கள், திரையுலகினர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.