×

கொரானாவிலிருந்து விடுபட இதை செய்யுங்க… நடிகை பூஜா ஹெக்டே அன்பு வேண்டுகோள்….

கொரானா தொற்றிலிருந்து விடுபட பிராணாயாமம் செய்யுங்க என நடிகை பூஜா ஹெக்டே ரசிகர்களை கேட்டுக்கொண்டுள்ளார். விஜய் – நெல்சன் கூட்டணியில் உருவாகும் பெயரிடப்படாத படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார் பூஜா ஹெக்டே. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் ஷூட்டிங் ஜார்ஜியாவில் நடைபெற்று வந்தது. இந்த ஷூட்டிங்கில் விஜய் – பூஜா ஹெக்டே இணைந்து டூயட் பாடும் பாடல் காட்சியும் படமாக்கப்பட்டது. 100 பேர் வரை கலந்துக்கொண்ட இந்த ஷூட்டிங்கில் சிலருக்கு கொரானா தொற்று ஏற்பட்டது. இதனால் விஜய்
 

கொரானா தொற்றிலிருந்து விடுபட பிராணாயாமம் செய்யுங்க என நடிகை பூஜா ஹெக்டே ரசிகர்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

விஜய் – நெல்சன் கூட்டணியில் உருவாகும் பெயரிடப்படாத படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார் பூஜா ஹெக்டே. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் ஷூட்டிங் ஜார்ஜியாவில் நடைபெற்று வந்தது. இந்த ஷூட்டிங்கில் விஜய் – பூஜா ஹெக்டே இணைந்து டூயட் பாடும் பாடல் காட்சியும் படமாக்கப்பட்டது. 100 பேர் வரை கலந்துக்கொண்ட இந்த ஷூட்டிங்கில் சிலருக்கு கொரானா தொற்று ஏற்பட்டது. இதனால் விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் 16 நாட்கள் ஷூட்டிங்கை முடித்து அவசரமாக சென்னை திரும்பினர்.

இதையடுத்து இந்த படத்தில் நடித்து வந்த பூஜா ஹெக்டேவுக்கும் கொரானா தொற்று உறுதியானது. இது குறித்து அவரே தனது ட்விட்டரில் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இதனைத்தொடர்ந்து கொரானா வழிமுறைகளை பின்பற்றி வீட்டில் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டு இருந்து வருகிறார். ரசிகர்களும் அவர் குணமாக வேண்டி பிரார்த்தனைகளும் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் கொரோனா தொற்றில் இருந்து விடுபட தனது குருநாதர் வழிகாட்டுதலின்படி பிராணாயாமம் செய்து வருகிறார். இது குறித்த தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பிராணாயாமம் செய்வதால் நம் மனது அமைதியாகும். எளிதாக மூச்சுவிடுலாம், கொரானாவை போக்க இந்த இரண்டும் அவசியம். நான் தினமும் இதனை செய்து வருவதால் என் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், நீங்களும் இதை செய்யுங்கள் என ரசிகர்களை கேட்டுக்கொண்டுள்ளார்.