×

சினிமாவில் நடிப்பது மிகப்பெருமை - நடிகை பூஜா ஹெக்டே

 

இந்தியா சினிமாவில் வியக்கத்தகு நடிகையாக மாறியுள்ளார் பூஜா ஹெக்டே. அவரது அபார வளர்ச்சியை கண்டு திரையுலகமே அதிர்ந்து போயுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார். தமிழில் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான ‘முகமூடி’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன்பிறகு தமிழில் வாய்ப்பு இல்லாததால் தெலுங்கு சினிமா பக்கம் சென்ற அவருக்கு ஏராளமான வாய்ப்புகள் குவிந்தது. குறுகிய காலத்தில் 15-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். கடந்த ஆண்டு அவர் நடிப்பில் ராதே ஷ்யாம், ஆச்சார்ய் உள்ளிள்ள படங்கள் வெளியாகின. தமிழில் விஜய் நடிப்பில் வெளியான ‘பீஸ்ட்’  படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். தற்போது இந்தியில் சில படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், சினிமாவில் நடிப்பது பெருமை என அவர் தெரிவித்துள்ளார். மேலும், தனது ஆல் டைம் பேவரட் அமிதாப் பச்சன் எனக்கூறிய பூஜா, தங்களை சுற்றி இருப்பவர்களை கவுரவிக்கும் ஆண்களை மிகவும் பிடிக்கும் என்றார்.