×

சிபிஐ அதிகாரியாக நடித்துள்ள பிரியாமணி.. படத்தின் டிரெய்லர் வெளியீடு !

 

 பிரியாமணி நடிப்பில் உருவாகியுள்ள ‘டி.ஆர்.56’ படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. 

‘பருத்தி வீரன்’ படத்தின் பிரபலமான பிரியாமணி, தென்னிந்தியாவில் புகழ்பெற்ற நடிகையாக மாறிவிட்டார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் மட்டும் நடித்து வரும் அவர், தற்போது ‘டி.ஆர்.56’ என்ற படத்தில் நடித்துள்ளார். க்ரைம் த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் பிரியாமணி சிபிஐ அதிகாரியாக நடித்துள்ளார். 

இந்த படத்தில் பிரவீன், தீபக் ராஜ் ஷெட்டி, ரமேஷ் பட், யத்திராஜ், வீணா பொன்னப்பா, மஞ்சுநாத் ஹெக்டே, சுவாதி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தை ராஜேஷ் ஆனந்த் லீலா இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ள பிரவீன் ரெட்டி. படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்திற்கு நோபின்பால் இசையமைத்து வருகிறார்.

இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் பான் இந்தியா படமாக உருவாகி வருகிறது. இந்நிலையில் இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அறிவியல் சார்ந்த க்ரைம் த்ரில்லர் படமாக உருவாகியுள்ளது. சமூகத்தில் நிலவி வரும் உண்மை சம்பவங்களை வைத்து இப்படம் உருவாகியுள்ளது. 

<a href=https://youtube.com/embed/i9P6TRGw-Zk?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/i9P6TRGw-Zk/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" style="border: 0px; overflow: hidden;" width="640">