×

காதல் தோல்வி அனுபவங்களை பகிர்ந்த நடிகை ராஷி கண்ணா

 

தெலுங்கில் பல்வேறு படங்களில் நடித்து தமிழில் இமைக்கா நொடிகள் மூலம் தமிழுக்கு அற்முகமானவர் ராஷி கண்ணா. பின்பு தொடர்ந்து அடங்க மறு, அயோக்யா, சங்கத்தமிழன், துக்ளக் தர்பார், திருச்சிற்றம்பலம் என பல்வேறு நடித்து பிரபலமானார். கடைசியாக சுந்தர்-சியின் அரண்மனை 4 படத்தில் நடித்திருந்தார். 

இந்த நிலையில் இந்தியில் ‘தி சபர்மதி ரிப்போர்ட்’ என்ற படத்தில் அவர் நடித்துள்ளார். இப்படத்தை தீரஜ் சர்ணா இயக்க விக்ராந்த் மாஸ்ஸி கதாநாயகனாக நடித்துள்ளார். ஜீ ஸ்டூடியோஸ் வழங்கும் இப்படம் நாளை(15.11.2024) வெளியாகவுள்ளது. இதையொட்டி படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறார். 

அந்த வகையில் ஒரு பேட்டியில் ராஷி கண்ணா தனக்கு நேர்ந்த காதல் தோல்வி குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். "சாதாரணமாகவே நான் அதிக உணர்ச்சிவசப்படக்கூடிய ரகம். எனக்கு ஏற்கனவே ஒரு காதல் கதை உள்ளது. சில காரணங்களால் அந்த காதல் தோல்வியில் முடிந்தது.அப்போது நான் மிகவும் வேதனைப்பட்டேன். மன அழுத்தத்துக்கும் ஆளானேன். அதன்பிறகு என்னை நானே மாற்றிக்கொண்டு வலுவாக நின்றேன்.நடிப்பின் மீது கவனம் செலுத்தினேன். தெலுங்கில் எனது முதல் படம் வெளியானதும் திருப்பதி கோவிலுக்கு சென்றேன். அங்கு மக்கள் அதிக அளவில் என்னை முற்றுகையிட்டனர். கூட்டத்தில் இருந்து என்னை வெளியே அழைத்துவர பாதுகாவலர்கள் கஷ்டப்பட்டனர். அந்த சம்பவத்தை எப்போதும் மறக்க முடியாது. ஒரு நடிகைக்கு இவ்வளவு புகழ் கிடைக்கும் என்று அதற்கு முன்பு எனக்கு தெரியாது" என்றார்.