×

நடிகை ராதிகா தனியார் மருத்துவமனையில் அனுமதி!

 

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகைகளில் ஒருவர் ராதிகா.. 1978ல் வெளியான இயக்குநர் பாரதிராஜாவின் ‘கிழக்கே போகும் ரயில்’ திரைப்படத்தின் மூலம் ராதிகா ஹீரோயினாக அறிமுகம் ஆனார். அதன் பிறகு பல ஆண்டுகள் தமிழ் சினிமாவில் டாப் நடிகையாக வளம் வந்தார். மேலும் தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் எனப் பல பிற மொழி படங்களிலும் ராதிகா நடித்துள்ளார். தமிழக அரசு விருதுகள், நந்தி விருதுகள், பிலிம்பேர் விருதுகள் ஏகப்பட்ட விருதுகளையும் வாங்கி குவித்துள்ளார். வெள்ளித்திரை மட்டுமின்றி சின்ன திரையிலும் கூட ஒரு கலக்கு கலக்கியவர். சித்தி, செல்லமே, வாணி ராணி என்று இவரது சீரியல்களும் தொடர்ந்து வெற்றி அடைந்து வருகிறது.

இதற்கிடையே நடிகை ராதிகா சரத்குமார் மருத்துவமனையில் அட்மிட் ஆகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 28ம் தேதியே டெங்கு காய்ச்சல் காரணமாகச் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ராதிகா அட்மிட் ஆகியிருக்கிறார். டெங்குவால் ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவால் அவர் மருத்துவமனையில் அட்மிட் ஆகியிருக்கிறார். இப்போது மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் ராதிகா இருக்கிறார். இன்னும் 5 நாட்கள் சிகிச்சைக்கு பிறகே ராதிகா வீடு திரும்புவார் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.