×

விக்னேஷ் சிவன் – நயன்தாராவை வாழ்த்திய நடிகை ராதிகா !

இயக்குனர் விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் ஒன்றிணைந்து தங்களது ரவுடி பிக்சர்ஸ் மூலம் ”கூழாங்கல்” என்ற புதிய படத்தை தயாரிக்கின்றனர். இந்த படத்தை பி.எஸ்.வினோத்ராஜ் என்ற புதுமுக இயக்குனர் இயக்க , யுவன் ஷங்கர் ராஜா படத்திற்கு இசையமைக்கிறார் . இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி நெட்டிசன்களின் வரவேற்பைப்பெற்று வரும் நிலையில் இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சர்வதேச திரைப்பட விழாவிலும் கலந்து கொள்ள தேர்வாகி இருப்பதாக விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர்
 

இயக்குனர் விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் ஒன்றிணைந்து தங்களது ரவுடி பிக்சர்ஸ் மூலம் ”கூழாங்கல்” என்ற புதிய படத்தை தயாரிக்கின்றனர்.

இந்த படத்தை பி.எஸ்.வினோத்ராஜ் என்ற புதுமுக இயக்குனர் இயக்க , யுவன் ஷங்கர் ராஜா படத்திற்கு இசையமைக்கிறார் .

இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி நெட்டிசன்களின் வரவேற்பைப்பெற்று வரும் நிலையில் இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சர்வதேச திரைப்பட விழாவிலும் கலந்து கொள்ள தேர்வாகி இருப்பதாக விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

இதற்கிடையே நடிகை ராதிகா ’நல்ல சினிமாவின் உணர்வை ஊக்குவிக்கும் உங்களுக்கும், நயன்தாராவுக்கும் எனது நல்வாழ்த்துக்கள்’ என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.