×

மீண்டும் கதையின் நாயகியாகும்‌ ராதிகா.. இயக்குனர் யார் தெரியுமா ?

 

 பிரபல இயக்குனர் இயக்கத்தில் நடிகை ராதிகா மீண்டும் கதையின் நாயகியாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

80-ளில் முன்னணி நாயகியாக வலம் வந்தவர் நடிகை ராதிகா. ரஜினி, கமல், விஜயகாந்த் உள்ளிட்ட பல முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார். சினிமாவிற்குப் பிறகு சின்னத்திரையிலும் ஒரு கலக்கு கலக்கியுள்ளார். தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்தவரும் ராதிகாவின் நடிப்பிற்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. 

இந்நிலையில் புதிய படம் ஒன்றில் கதையின் நாயகியாக ராதிகா நடிக்க உள்ளார். அந்தப் படத்தை அறம் படத்தின் மூலம் பிரபலமான கோபி நயினார் இயக்கவுள்ளார். அவர் தற்போது அன்றைய வைத்து 'மனுஷி' என்ற புதிய படத்தை இயக்கி வருகிறார். அந்தப் படத்தின் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் விரைவில் ராதிகாவின் படத்தை இயக்க உள்ளார். 

இந்த படத்திற்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. ராதிகாவுடன் இணைந்து இந்த படத்தில் மலையாள நடிகர் லால் நடிக்க உள்ளார். இவர் சண்டக்கோழி, கர்ணன் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்த பிரபலமானவர். வித்தியாசமான கதைகளத்தில் உருவாகும் இந்த படத்தின் முதல் கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.