×

 கிளாமர் லுக்கில் ராய் லஷ்மி... வைரல் புகைப்படங்கள் 

 

நடிகை ராய் லஷ்மியின்  புதிய கிளாமர் புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது. 

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி எனப் பல மொழிகளில் கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை ராய் ல‌ஷ்மி. தமிழில் ‘மங்காத்தா’ படம் மூலம் ரசிகர்களிடையே புகழ்பெற்றவர் அவர், தமிழில் முன்னணி நாயகியாக வலம் வருகிறார். தாம் தூம், மங்காத்தா, காஞ்சனா, அரண்மனை, நீயா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர், தொடர்ந்து ஹாரர் படங்களில் நடித்து வருகிறார். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான  ‘நீயா 2’ படம் தோல்வியை தழுவியது. இதைத்தொடர்ந்து வெளியான ‘சிண்ட்ரெல்லா’ திரைப்படமும் பெரியதாக ஓடவில்லை.  இருந்தப்போதிலும் புதிய படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். 

அதேபோன்று சினிமாவில் பட வாய்ப்புகளை பெற தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் புதிய கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.