×

அழகு தேவதையாக மாறிய பிக்பாஸ் நடிகை.. புடவையில் கலக்கும் புகைப்படங்கள் !

 

புடவையில் அழகு தேவதை போன்று ஜொலிக்கும் புகைப்படங்களை நடிகை ரைசா வில்சன் வெளியிட்டுள்ளார். 

மாடல் அழகியான நடிகை ரைசா வில்சன் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்களை கவர்ந்தவர். தென்னிந்திய அழகிப்போட்டியில் பட்டம் வென்ற அவர், தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக வலம் வருகிறார். தமிழில் முதல்முறையாக பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிப்பரப்பப்பட்ட போது பிக்பாஸ் சீசன் 1-ல் போட்டியாளராக கலந்துக்கொண்டு அனைவரையும் கவர்ந்தார். 

சினிமாவில் தனுஷின் ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தில் சிறிய ரோலில் நடித்து நடிகையாக அறிமுகமானார்.  அதன்பிறகு  ஹரிஷ் கல்யாணுடன் ‘பியார் பிரேமா காதல்’, ‘தனுசு ராசி நேயர்களே’, ‘வர்மா’, ‘எப்.ஐ.ஆர்’, ‘ஹாஸ்டாக் லவ்’, ‘அலிஸ்’, ‘காதலிக்க யாரும் இல்லை’, ‘தி சேஸ்’, ‘பொய்க்கால்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இதையடுத்து ஓரிரு திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ரைசா வில்சன் தொடர்ந்து தனது போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். குறிப்பாக கிளாமர் புகைப்படங்கள் மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வைத்துள்ளார். இந்நிலையில் ஹோம்லி லுக்கில் புடவையில் இருக்கும் புகைப்படங்களை ரைசா வில்சன் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.