×

இணையத்தை கலக்கும் ராஷ்மிகா மந்தனா.. வைரலாகும் புகைப்படங்கள் !

 

 நடிகை ராஷ்மிகா மந்தனாவின் மாடர்ன் புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகிறது. 

கன்னட திரைப்படம் ஒன்றில் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என 4 மொழிகளில் தற்போது பிசியாக நடித்து வருகிறார். இந்தியாவின் க்ரஷ் நடிகையாக இருக்கும் அவர், இளைஞர்களின் கனவு கன்னியாக இருந்து வருகிறார். அதனால் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். 

‘கீதாகேவிந்தம்’ படத்தின் மூலம் ஓவர் நைட்டில் இந்திய ரசிகர்களின் மனதை கொள்ளைக் கொண்டார். அதன்பிறகு  அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான ‘புஷ்பா’ படத்தில் ஸ்ரீவள்ளி கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.‌ அதேபோன்று விஜய் மற்றும் வம்ஷி கூட்டணியில் உருவான ‘வாரிசு’ படத்திலும் கதாநாயகியாக நடித்திருந்தார். இதில் விஜய்யுடன் அவர் ஆடிய ரஞ்சிதமே பாடல் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. 

இந்நிலையில்  வித்தியாசமாக அவர் வெளியிட்டுள்ள போட்டோஷூட் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.  ஸ்டைலிஷ் லுக்கில் மாடனாக  இருக்கும் அந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகிறது.