×

செம்ம ஸ்டைலிஷ்ஷில் ராஷ்மிகா மந்தனா... இணையத்தை தெறிக்கவிடும் புகைப்படங்கள் !

 

நடிகை ராஷ்மிகா மந்தனாவின் ஸ்டைலிஷ் லுக் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. 

தெலுங்கில் முன்னணி நடிகையான ராஷ்மிகா மந்தனா, தற்போது தமிழ் மற்றும் இந்தி படங்களில் பிசியாக நடித்து வருகிறார். ‘கீதாகேவிந்தம்’ படத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் ஏற்பட்ட கெமிஸ்ட்ரி, ராஷ்மிகாவை நேஷ்னல் கிரிஷ் நடிகையாக மாற்றியது. இதனால் இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வருகிறார். 

இவரது நடிப்பில் வெளியான ‘புஷ்பா’ உள்ளிட்ட சில திரைப்படங்கள் அடுத்தடுத்து ஹிட் கொடுத்துள்ளார். அதேபோன்று விஜய் மற்றும் வம்ஷி கூட்டணியில் உருவான ‘வாரிசு’ படத்திலும் கதாநாயகியாக நடித்திருந்தார். இதில் விஜய்யுடன் அவர் ஆடிய ரஞ்சிதமே பாடல் ரசிகர்களிடையே மிகுந்த கவனம் பெற்றது. தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார். 

இந்நிலையில் ஸ்டைலிஷ் லுக்கில் இருக்கும் புகைப்படங்களை ராஷ்மிகா வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்களை ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.